இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான தமிழ் நாட்டின் டி.நடராஜனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐ.பி.எல். போட்டியின் இரண்டாம் பாகப் போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகின்றது.
இதில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.
நடராஜன் இடம்பெறாமை ஐதராபாத் அணியின் பந்து வீச்சுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
அந்த அணியின் புவ்னேஷ்வர் குமார், சந்தீப் ஷர்மா, ரஷீத் கான், மொஹமட் நபி என சிறந்த பந்துவீச்சு பட்டாளம் இருப்பதால் எதிரணியை அவர்களால் சமாளிக்க முடியும் எனவும் கூறப்படுகிறது. எனினும், போட்டியின் கடைசி ஓவர்களை சிறப்பாக வீசக்கூடிய நடராஜன் இல்லாதமை சன் ரைசர்ஸ் அணிக்கு பெரும் இழப்பாககும்.
No comments:
Post a Comment