பாடசாலைகளை மீள திறப்பது குறித்த வழிகாட்டல் விரைவில் - கல்வி. சுகாதார அமைச்சு அதிகாரிகள் வெளியிடுவர் என்கிறார் தினேஷ் - News View

About Us

About Us

Breaking

Monday, September 20, 2021

பாடசாலைகளை மீள திறப்பது குறித்த வழிகாட்டல் விரைவில் - கல்வி. சுகாதார அமைச்சு அதிகாரிகள் வெளியிடுவர் என்கிறார் தினேஷ்

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான சுகாதார வழிகாட்டல்கள் கல்வி மற்றும் சுகாதார அதிகாரிகளினால் அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படுமென கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். 

பாடசாலைகளை மீண்டும் திறப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து கல்வி மற்றும் சுகாதார அமைச்சக அதிகாரிகள் இன்னும் கலந்துரையாடி வருகின்றனர். பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான ஒரு திகதியை இன்னும் தீர்மானிக்கவில்லை. 

தற்சமயம் பாடசாலை ஆசிரியர்களுக்கான தடுப்பூசி செயல்முறை முடிவடையும் நிலையில், நாடு முழுவதும் 240,000 ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் செயல் திட்டத்தை சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தரம் ஐந்து புலமைப்பரிசில், உயர்தர, சாதாரணதர பரீட்சைகளை நடத்துவதற்கு தேவையான திட்டங்களையும் கல்வி அமைச்சு பரிசீலித்து வருகின்றது.

இதேவேளை பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் செயற் திட்டத்தை துரிதப்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment