பல்கலைக்கழகங்கள் விரைவில் திறக்கப்படும், சுகாதார தரப்புடன் இணைந்து வேலைத்திட்டம் - பேராசிரியர் சம்பத் அமரதுங்க - News View

About Us

About Us

Breaking

Monday, September 20, 2021

பல்கலைக்கழகங்கள் விரைவில் திறக்கப்படும், சுகாதார தரப்புடன் இணைந்து வேலைத்திட்டம் - பேராசிரியர் சம்பத் அமரதுங்க

இலங்கை பல்கலைக்கழகங்களின் கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு கொவிட் எதிர்ப்பு தடுப்பூசிகள் இரண்டையும் வழங்கி, பல்கலைக்கழகங்களை விரைவில் திறப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UCG) தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

சுகாதாரத் தரப்பினருடன் இணைந்து இதற்காக துரித வேலைத்திட்டமொன்றை செயற்படுத்தியுள்ளதாக பேராசிரியர் மேலும் தெரிவித்தார். 

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கல்வி மற்றும் கல்வி சாரா துறைகளில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பணியாளர்களுக்கும் இரு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுவிட்டது. 

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் 30 வயதிற்குட்பட்ட கல்வி, கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக அந்தந்த மாவட்டங்களில், அருகிலுள்ள சுகாதார சேவை மையங்களுடன் ஒருங்கிணைந்து துரித நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் தெரிவித்தார்.

மேலும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் 30 வயதுக்கு மேற்பட்ட மற்றும் அதற்கு கீழ்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் இரு தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்துள்ளன. 

வரும் ஆண்டிற்காக பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கைகள் இத்தினங்களில் இடம்பெற்று வருகின்றது. 

இந்த நோக்கத்திற்காக பணியாளர்களை பணிக்கு அழைப்பது அவசியமாக காணப்பட்டமையினால் சிறப்பு அனுமதியினை பெற்று கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக பேராசிரியர் தெரிவித்தார்

No comments:

Post a Comment