கொரோனா தொற்றாளர்கள், மரணங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியேற்பட்டாலும் அபாயம் குறையவில்லை - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் - News View

About Us

About Us

Breaking

Friday, September 10, 2021

கொரோனா தொற்றாளர்கள், மரணங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியேற்பட்டாலும் அபாயம் குறையவில்லை - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

(எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையில் கனிசமானளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதற்காக திருப்தியடைய முடியாது. நாளாந்தம் 2000 - 3000 க்கும் இடைப்பட்ட தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றமை மற்றும் நூற்றுக்கும் அதிக தொற்றாளர்கள் உயிரிழக்கின்றமை நாடு இன்னும் அபாய நிலைமையிலேயே காணப்படுவதை தெளிவாகக் காண்பிக்கிறது என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போதும் நாட்டில் நாளாந்தம் 2000 - 3000 தொற்றாளர்கள் இனங்காணப்படுவதோடு, நூற்றுக்கும் அதிகமான மரணங்களும் தொடர்ச்சியாக பதிவாகிக் கொண்டிருக்கிறது.

எனவே கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது தற்போது கொவிட் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையில் கனிசமானளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதற்காக திருப்தியடைய முடியாது. எதிர்வரும் சில நாட்களுக்கும் இதேபோன்று நூற்றுக்கும் அதிக மரணங்கள் பதிவாகும் நிலைமையே காணப்படும்.

எனவே ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் நாடு திறக்கப்பட்டாலும் அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவதிலிருந்து விலகக்கூடாது என்பதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment