நாளை முதல் அரிசி, சீனிக்கு உச்சபட்ச விலை நிர்ணயிக்கப்படும் - அமைச்சர் லசந்த அலகியவன்ன - News View

Breaking

Wednesday, September 1, 2021

நாளை முதல் அரிசி, சீனிக்கு உச்சபட்ச விலை நிர்ணயிக்கப்படும் - அமைச்சர் லசந்த அலகியவன்ன

நாளை (02) முதல் அரிசி, சீனி ஆகியவற்றுக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்வதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக, கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை வெளியிடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் இன்று (01) முதல் சிவப்பு சீனி ஒரு கிலோ ரூ. 130 இற்கு பெறலாம் என அவர் கடந்த வாரம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment