ஜ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்பியது தமிழ் தேசிய மக்கள் முன்னணி ! - News View

Breaking

Thursday, September 9, 2021

ஜ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்பியது தமிழ் தேசிய மக்கள் முன்னணி !

(கனகராசா சரவணன்)

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுது. இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமது கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

ஜ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தமிழர் தரப்பு குரலாக உறுதியுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது நிலைப்பாட்டை தெரிவித்து அதன் கட்சி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செயலாளர் செல்வராச கஸேந்திரன் கையொப்பொம் இட்டு கடிதம் ஒன்றை நேற்று புதன்கிழமை அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த கடித்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் சிறிலங்காவை பாரப்படுத்துவதே தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கான ஒரே வழி, காணாமல் போனோருக்கான அலுவலகம் என்பது சிறிலங்கா அரசின் வெறும் ஏமாற்று தந்திரமே தொடரும் அடக்குமுறைகளை கண்காணிக்க மனித உரிமை ஆணைக்குழு ஒரு விசேட தூதுவரை நியமிக்க வேண்டு.

அத்தோடு, வடக்கு கிழக்கில் மனித உரிமை ஆணையக்கத்தின் ஒரு கள அலுவலகம் திறக்கப்பட்டு தொடரும் அடக்குமுறைகள் கண்காணிக்கப்பட வேண்டும்.

இராணுவமயமாக்கல் பல்வேறு பரிணாமங்களில் நடந்து தமிழ் மக்களின் இருப்பு தற்போதும் கேள்விக்க்கு உள்ளாக்கப்படுவது குறித்து ஐநா பிரேரணை கவனத்தில் எடுக்காமை மிகுந்த கவலைக்கு உரியது. இது குறித்து ஐ.நா கவனம் செலுத்த வேண்டும்.

சிறிலங்காவின் நடைமுறை அரசியலமைப்பின் 13. திருத்த சட்டம், தமிழர்களின் தேசிய இஅன்ப்பிரச்சினைக்கான தீர்வுக்கு ஒரு ஆரம்பப்புள்ளியாக் கூட கருதப்பட முடியாதது.

சிறிலங்கா , பல் தேச கட்டமைப்புக்கொண்ட நாடாக உருவாககூடிய , தமிழர்களின், தமிழ் தேசத்தின் சுயநிர்ண்ய உரிமையை அங்கீகரிக்கும் ஒரு அரசியலமைப்பு மூலமே தமிழர்களின் பிரச்சினைக்கான் தீர்வு கிடைக்கும் என அந்த கடித்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment