நாட்டில் எந்தவொரு அசம்பாவிதமோ, பிரச்சினைகளுமோ இடம்பெறாதுள்ளமைக்கான காரணத்தை கூறுகிறார் சரத் வீரசேகர - News View

Breaking

Thursday, September 30, 2021

நாட்டில் எந்தவொரு அசம்பாவிதமோ, பிரச்சினைகளுமோ இடம்பெறாதுள்ளமைக்கான காரணத்தை கூறுகிறார் சரத் வீரசேகர

(எம்.எம்.சில்வெஸ்டர்)

எமது புலனாய்வுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை மிகவும் வினைத்திறனாக செயற்பட்டு வருதாலேயே நாட்டில் எந்தவொரு அசம்பாவிதமோ பிரச்சினைகளுமோ இடம்பெறாதுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பு 2 கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்தின் 42 உத்தியோபூர்வ இல்லங்கள் அப்புறப்படுத்தப்படவுள்ளதால் இதன் முதற்கட்டமாக 22 வீடுகளை கொம்பனித் தெருவில் அமைந்துள்ள மெட்ரோ ஹோம்சில் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வழங்கியிருந்தார்.

இந்த இல்லங்களுக்கான சாவிகளை வழங்கும் நிகழ்வு நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சரிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில், "நாட்டின் பிரதானமானது தேசிய பாதுகாப்பாகும். தேசிய பாதுகாப்பானது திறம்பட செயற்படுவது புலனாய்வுப் பிரிவினர் கீழேயே தங்கியுள்ளது.

எமது புலனாய்வுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை மிகவும் வினைத்திறனாக செயற்பட்டு வருதாலேயே எந்தவொரு நாட்டில் எந்தவொரு அசம்பாவிதமோ பிரச்சினைகளுமோ இடம்பெறாதுள்ளது " என்றார்.

No comments:

Post a Comment