2021 ஐ.பி.எல். தொடரிலிருந்து கிறிஸ் கெய்ல் விலகல் - News View

Breaking

Thursday, September 30, 2021

2021 ஐ.பி.எல். தொடரிலிருந்து கிறிஸ் கெய்ல் விலகல்

2021 இந்தியன் பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகுவதாக கரீபியன் புயல் கிறிஸ் கெய்ல் திடீரென அறிவித்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியும் இந்த தகவலை வியாழக்கிழமை பிற்பகுதியில் உறுதிபடுத்தியுள்ளது.

எதிர்வரும் டி-20 உலகக் கிண்ணத் தொடருக்காக மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஆட தன்னை புத்துணர்வாக வைத்துக் கொள்ள ஐ.பி.எல். பயோபபுள் சூழலிலிருந்து விடுபடுவதாக கிறிஸ் கெய்ல் அறிவித்துள்ளார்.

டி-20 உலகக் கிண்ணத்துக்காக மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இணையும் வரை அவர் டுபாயில் தங்கியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment