'ஆப்கானிஸ்தான் மக்கள் அனைவரும் சில மாதங்களில் வறுமையில் வீழ நேரலாம்' - News View

Breaking

Friday, September 10, 2021

'ஆப்கானிஸ்தான் மக்கள் அனைவரும் சில மாதங்களில் வறுமையில் வீழ நேரலாம்'

ஆப்கானிஸ்தான் மக்கள் அனைவரும் சில மாதங்களில் வறுமையில் வீழ நேரலாம் என்று மனிதாபிமான உதவிப் பணியாளர்கள் கூறியதாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி கூறுகிறது.

தலிபான் வெற்றிக்கு முன்பேகூட, ஆப்கானிஸ்தானின் 4 கோடி மக்கள் தொகையில் பாதிப்பேருக்கு மனிதாபிமான உதவி தேவைப்பட்டது என்று ஐ.நா. கூறுகிறது.

தலிபானின் புதிய அரசை பலப்படுத்தாமல் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு எப்படி உதவி செய்ய முடியும் என்று மனிதாபிமான உதவி நிறுவனங்கள் ஆலோசனை செய்கின்றன.

சர்வதேச நிதி அமைப்பில் இருந்தும், வெளிநாட்டு உதவிகளில் இருந்தும் தற்போது ஆப்கானிஸ்தான் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மத்திய வங்கியின் 900 கோடி அமெரிக்க டொலர் மதிப்புள்ள சொத்துகள் மேற்கத்திய நாடுகளில் முடக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, நிதியுதவிகள் நிறுத்தப்பட்டதால், 2000 சுகாதார நிலையங்கள் மூடப்படும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் இந்த வாரம் எச்சரித்திருந்தது.

இதனால், பல லட்சம் ஆப்கானியர்களுக்கு சுகாதார வசதிகள் கிடைக்காமல் போகலாம் என்று அஞ்சப்படுகிறது.

No comments:

Post a Comment