பதுளையில் அதிக விலைக்கு சீமெந்தை விற்ற நபரை சுற்றிவளைத்த நுகர்வோர் விவகார அதிகார சபை - News View

About Us

About Us

Breaking

Thursday, September 2, 2021

பதுளையில் அதிக விலைக்கு சீமெந்தை விற்ற நபரை சுற்றிவளைத்த நுகர்வோர் விவகார அதிகார சபை

இரா.சுரேஸ்குமார்

பதுளை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் பதுளை முத்தியங்கனை ஆலயத்தின் பின்புறம் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

இரகசிய புலனாய்வாளரைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட சோதனையின் போது, ஒரு மூடை சீமெந்து ரூ.1150 /- க்கு விற்கப்பட்டமை தெரியவந்தது.

குறித்த லொறியில் கிட்டத்தட்ட 600 மூடை சீமெந்து இருந்ததாகவும், சோதனையின் போது கிட்டத்தட்ட 400 மூடை சீமெந்து அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் பதுளை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபையின் மூத்த புலனாய்வு அதிகாரி ஷான் யபரட்ன கூறினார்.

லொரியின் ஓட்டுநரை நுகர்வோர் விவகார அதிகார சபை காவலில் எடுத்து விசாரணைக்காக சீமெந்துடன் லொரியை தடுத்து நிறுத்தியது.

லொறியின் சாரதி மீது பதுளை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட உள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment