ஸ்பெயின் எரிமலைக் குழம்பு கடலில் கலந்ததினால் அச்சம் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 30, 2021

ஸ்பெயின் எரிமலைக் குழம்பு கடலில் கலந்ததினால் அச்சம்

ஸ்பெயின் நாட்டின் ஆளுகையின் கீழ் உள்ள லா பல்மா தீவில் நடந்த எரிமலை வெடிப்பின் போது வெளியிடப்பட்ட எரிமலை குழம்புகள் அட்லாண்டிக் பெருங்கடலை சென்றடைந்துள்ளன.

இதன் காரணமாக நச்சு வாயுக்கள் வெளியேற்றப்படலாம் என்றும் வெடிப்புச் சம்பவங்கள் நிகழக்கூடும் என்றும் அச்சங்கள் எழுந்துள்ளன.

ப்லாயா நூவே எனும் இடத்தில் செந்நிறத்தில் உள்ள எரிமலை குழம்பு கடலில் கலக்கும் இடத்தில் வெள்ளை நிற ஆவி மேகம் போன்று வெளியிடப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக தூண்டப்படும் இரசாயன நிகழ்வுகள் மனிதர்களின் தோல் மற்றும் கண்களுக்கு எரிச்சல் உண்டாக்குவதுடன் சுவாசக் கோளாறுகளையும் உண்டாக்கலாம்.

கெனரி தீவுகளில் செப்டம்பர் 19ஆம் திகதி எரிமலை வெடிப்பு நிகழ்ந்த பின்னர் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. சுமார் 6 ஆயிரம் மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment