பாகிஸ்தான் ரி20 உலக கிண்ணத் தெரிவு குறித்து விசனம் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 30, 2021

பாகிஸ்தான் ரி20 உலக கிண்ணத் தெரிவு குறித்து விசனம்

14வது ஐபிஎல் போட்டி தொடரில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இரண்டாம் கட்டப் போட்டிகள் இடம்பெற்று வருகின்றன .

இந்த போட்டிகளில் இந்தியாவின் உலகக்கிண்ண அணியில் இடம் பெற்றிருக்கும் மும்பை வீரர்களாக சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன் அதேபோன்று ஹர்திக் பாண்டியா ஆகிய வீரர்கள் தொடர்ந்தும் துடுப்பாட்டத்தில் ஏமாற்றி வருகின்றனர்.

இதனால் இந்தியாவின் மத்திய வரிசையில் பலமற்று இருப்பதாக ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பகிர ஆரம்பித்துள்ளனர். 

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உள்ளூரிலேயே ரி 20 தொடர் ஒன்றை நடத்தி வருகிறது, பாகிஸ்தானிய வீரர்கள் மட்டும் பங்கேற்று வரும் இந்த டுவென்டி 20 தொடரில் பாகிஸ்தானின் மத்திய வரிசை வீரர்களும் துடுப்பாட்டத்தில் சொதப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சோஹைப் மக்சூத் : 18, 0, 24 (42 ஓட்டங்கள்)
குஷ்டில் ஷா : 21, 24, 6 (51 ஓட்டங்கள்)
அஸாம் கான் : 20, 14, 1 (35 ஓட்டங்கள்)

மேற்குறித்த மூன்று வீரர்களும் பாகிஸ்தான் மத்திய வரிசை வீரர்களாக உலகக் கிண்ணத்துக்கான அணியில் உள்வாங்கப்பட்டவர்கள், ஆகவே இவர்கள் இவ்வாறு பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்கப் போகிறார்கள் என கேள்வி எழுந்துள்ளது. 

24ஆம் திகதி இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் உலக கிண்ணத்தினுடைய முக்கியமான ஆட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment