எதிர்வரும் ஒக்டோபர் தொடக்கத்தில் இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கொழும்புக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக புதுடெல்லியின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தி இந்துவிடம் தெரிவித்துள்ளன.
இந்தியா மற்றும் இலங்கை உறவுகளில் ஏற்படும் நெருக்கடிக்கு மத்தியில் இந்த விஜயம் அமையவுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோருக்கு இடையில் நியூயார்க்கில் நடந்த சந்திப்பின் 10 நாட்களுக்குப் பிறகு ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவின் திட்டமிடப்பட்ட வருகை முன்னெடுக்கப்படுகிறது.
புதுடெல்லி மற்றும் கொழும்பில் உள்ள அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் ஒக்டோபர் 2 மற்றும் 5 ஆம் திகதிகளுக்கு இடையில் இந்த விஜயம் இருக்கும் என தி இந்துவிடம் உறுதிபடுத்தியுள்ளன.
No comments:
Post a Comment