ஆப்கானிஸ்தான் இடைக்கால பிரதமராக அகூந்த்ஸாதா அறிவிப்பு : அமைச்சர்களின் விவரங்களும் வெளியீடு - News View

Breaking

Tuesday, September 7, 2021

ஆப்கானிஸ்தான் இடைக்கால பிரதமராக அகூந்த்ஸாதா அறிவிப்பு : அமைச்சர்களின் விவரங்களும் வெளியீடு

ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசில் அங்கம் வகிப்பவர்களின் விவரத்தை தலிபான் தலைமை அறிவித்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானை இனி 'ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்' என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தலைநகர் காபூலில் தலிபான் செய்தித் தொடர்பாளர் சஃபியுல்லா முஜாஹிதின் இன்று இரவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இடைக்கால அரசில் இடம்பெறும் அமைச்சர்களின் விவரங்களை வெளியிட்டார்.

அதன் விவரம்

பிரதமர்
மெளலவி ஹெபடூலா அகூந்த்ஸாதா (இவர் தலிபான் இயக்கத்தின் நிறுவனர் முல்லா ஒமருடன் கூட்டாளியாக இருந்தவர்)

துணை பிரதமர்
மெளலவி அப்துல் கனீ பரதர்

உள்துறை
சிராஜூதீன் ஹக்கானி 
(இவர் ஹக்கானி ஆயுத போராளிகள் குழுவின் தலைவருடைய மகன் - இந்த குழு அமெரிக்காவால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது)

பாதுகாப்பு
மெளலவி யாகூப் (இவர் தலிபான் நிறுவனர் முல்லா ஒமரின் மகன்)

வெளியுறவு
ஆமிர் கான் முட்டாக்கி

வெளியுறவு துணை அமைச்சர்
அபாஸ் ஸ்டானிக்ஸாய்

(தலிபான் வழக்கப்படி, மெளலவி, அகூந்த் போன்றவை சமய தலைமைக்கு வழங்கப்படும் பட்டமாகும்.)

தற்போது அறிவிக்கப்பட்டவர்கள், முறைப்படி அரசு அமையும் வரை இடைக்காலமாக அமைச்சரவையை வழிநடத்துவார்கள் என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

யார் இந்த ஹஸ்ஸன் அகூந்த்?
தலிபான் இயக்கத்தை நிறுவியவர்களில் முக்கியமானவர் இவர். அந்த இயக்கத்தின் சக்தி வாய்ந்த மற்றும் உச்ச அதிகாரம் கொண்ட குழுவான ரெஹ்பாரி ஷூராவின் தலைவராக 20 ஆண்டுகளாக இருந்தார். இந்த குழுதான் அரசியல், ராணுவம், சமய முடிவுகளை எடுக்கும்.

2001 இல் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் ஆளுகை செலுத்தி வந்த தலிபானை வெளியேற்றும்போது தலிபான் அமைச்சரவையில் அமைச்சராக ஹஸ்ஸன் அகுந்த் இருந்தார்.

ஆயுத குழுவின் தலைவர் என்பதை விட தலிபான்களால் போற்றக் கூடிய சமயத் தலைவராகவே ஹஸ்ஸன் அகுந்தை அவர்கள் கருதினர்.

பிரிட்டன் அரசு தடை விதித்துள்ளவர்களின் ஆவணங்களின்படி இவர் கந்தஹார் மாகாணம், மியால் பகுதி, ஸ்பின் போத்லாக் மாவட்டத்தில் பிறந்தவர், இவரது வயது 58. நூர்சாய் பழங்குடியைச் சேர்ந்தவர்.

முல்லா ஹஸ்ஸன் அகுந்த், ஐ.நா பயங்கரவாதிகள் பட்டியலில் இருப்பவர். அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலிலும் இவர் இருக்கிறார்.

No comments:

Post a Comment