நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி அத்தியாவசியமானது - விசேட வைத்திய நிபுணர் ரஜீவ டி சில்வா - News View

Breaking

Saturday, September 11, 2021

நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி அத்தியாவசியமானது - விசேட வைத்திய நிபுணர் ரஜீவ டி சில்வா

(எம்.மனோசித்ரா)

புற்றுநோய், தீவிர எச்.ஐ.வி. நோய், நீரிழிவு உள்ளிட்ட பாரதூரமான நோய்களால் பாதிக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு எந்தவொரு தடுப்பூசியையும் முதற்கட்டமாக பெற்றுக் கொண்டதன் பின்னர், மூன்றாவது தடுப்பூசியையும் வழங்க வேண்டியது அத்தியாவசியமானதாகும் என்று நோய் எதிர்ப்பு தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ரஜீவ டி சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில், சில நோயாளர்களுக்கு அவர்களது உடலில் காணப்படுகின்ற நாட்பட்ட நோய் நிலைமைகளால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகாது. புற்றுநோய், தீவிர எச்.ஐ.வி. நோய், நீரிழிவு உள்ளிட்ட பாரதூரமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இதில் உள்ளடங்குகின்றனர்.

எனவே இவ்வாறானவர்கள் எந்தவொரு தடுப்பூசியையேனும் இரு கட்டங்களாகவும் பெற்றுக் கொண்டதன் பின்னர் மூன்றாம் கட்ட தடுப்பூசியையும் பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும்.

அஸ்ட்ரசெனிகா, மொடர்னா மற்றும் பைசர் ஆகியவை மூன்றாம் கட்டமாக வழங்குவதற்கு பொறுத்தமான தடுப்பூசிகள் ஆகும்.

எவ்வாறிருப்பினும் 6 மாதங்களின் பின்னர் இவர்களுக்கும் முதல் இரண்டு கட்டங்களாக பெற்றுக் கொண்ட அதே தடுப்பூசியை அல்லது பைசர், மொடர்னா மற்றும் அஸ்ட்ரசெனிகா ஆகியவற்றில் ஏதேனுமொன்றை மூன்றாம் கட்டமாக வழங்குமாறும் பரிந்துரைக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad