பாடசாலைகளை திறந்தால் மாணவ கொவிட் கொத்தணிகள் உருவாக வாய்ப்புள்ளது - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் - News View

Breaking

Saturday, September 11, 2021

பாடசாலைகளை திறந்தால் மாணவ கொவிட் கொத்தணிகள் உருவாக வாய்ப்புள்ளது - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

(எம்.மனோசித்ரா)

பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முன்னர் 12 வயதுக்கு மேற்பட்ட சகல மாணவர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் பணிகளை நிறைவு செய்ய வேண்டும். அவ்வாறில்லை எனில் மாணவர்கள் மத்தியில் கொத்தணிகள் உருவாக வாய்ப்புள்ளது என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேவையான தடுப்பூசிகளை பகிரந்தளித்தால் மாணவர்களுக்கு பாதுகாப்பான முறையில் அவற்றை வழங்க தயாராக இருக்கின்றோம்.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் தற்போது சமூகத்திலிலுள்ள தொற்றாளர்கள் பாடசாலைகளுக்குள் வந்து மாணவர்கள் மத்தியில் கொத்தணிகள் உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. இதன் காரணமாக மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் என சகலரும் மன உளைச்சலுக்கு உள்ளாகக் கூடும்.

இதன் காரணமாக மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் வீதம் குறைவடைவதோடு, ஆசிரியர்கள் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதிலும் சிக்கல் ஏற்படும் என்றார்.

No comments:

Post a Comment