பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராக ரமீஸ் ராஜா போட்டியின்றி தெரிவு - News View

Breaking

Monday, September 13, 2021

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராக ரமீஸ் ராஜா போட்டியின்றி தெரிவு

(எம்.எம்.சில்வெஸ்டர்)

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவரான ரமீஸ் ராஜா பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராக போட்டியின்றி இன்று தெரிவாகியுள்ளார்.

இதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்‍கெட் சபையின் 36 ஆவது அவைத் தலைவராகவும் இந்தப் பதவி‍யை ஏற்கும் 30 ஆவது நபராகவும் அவர் விளங்குகிறார்.

இஜாஸ் பட், ஜாவிட் புக்ரி, அப்துல் ஹபீஸ் காதர் ஆகியோருக்கு அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரொருவர் இந்தப் பதவியை ஏற்கும் நான்காவது நபராகவும் பதிவானார்.

1992 உலக கிண்ணத்தை வென்ற பாகிஸ்தான் அணியில் அங்கம் வகித்த ரமீஸ் ராஜா, 1984 முதல் 1997 வரையான 13 வருடங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக விளையாடியதுடன், அணியின் வெற்றிக்காக பாடுபட்ட வீரர்களில் ஒருவராவார்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றாலும், போட்டி வர்ணணையாளராக செயற்பட்டு வந்த ரமீஸ் ராஜா, 2003/04 காலப் பகுதியில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பிரதான நிறைவேற்று அதிகாரியாகவும் செயற்பட்டிருந்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad