அவசரகால சட்டத்தை நீக்கி அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் பிரகாரம் செயற்படுங்கள் : துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளுக்கமைய செயற்பட்டால் நெருக்கடியான சூழ்நிலையை வெற்றி கொள்ளலாம் - ஐக்கிய மக்கள் சக்தி - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 1, 2021

அவசரகால சட்டத்தை நீக்கி அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் பிரகாரம் செயற்படுங்கள் : துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளுக்கமைய செயற்பட்டால் நெருக்கடியான சூழ்நிலையை வெற்றி கொள்ளலாம் - ஐக்கிய மக்கள் சக்தி

(இராஜதுரை ஹஷான்)

அவசரகால சட்டத்தை நீக்கி, அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் பிரகாரம் கொவிட் பெருந்தொற்றிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்க ஜனாதிபதி மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு அமைய ஜனாதிபதி செயற்பட்டால் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையை வெற்றி கொள்ளலாம் என சுட்டிக்காட்டி ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 2003 ஆம் ஆண்டின் நுகர்வோர் விவகார அதிகாரச் சட்டம் எண் 9 இன் படி அதிகபட்ச விலைகளை பரிந்துரைத்தும் பொருட்களை சேகரித்து களஞ்சியப்படுத்தலைத் தடுக்கவும் சட்ட ரீதியான அதிகாரங்கள் உள்ளன.

இதனால் ஏதேனும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் தடைபட்டால் இதற்கு அரசின் திறமையின்மை மற்றும் தவறான நிர்வாகமே காரணமாகுவதோடு இது பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அவசரநிலை பிரகடனம் தேவைப்படும் ஒரு தொந்தரவு காரணமாக அவசரநிலை என்று அழைக்கப்படுவது வீணாகவும் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை தொடர்ச்சியாகவும் தவறாகவும் கட்டுப்படுத்துவதன் மூலம் சர்வாதிகாரத்தை தொடர வேண்டும் என்ற நோக்கம் அரசாங்கத்திடம் உள்ளது.

அறிவிக்கப்பட்டதாக கூறப்பட்ட அவசர கால நிலையை உடனடியாக இரத்து செய்து தொற்று நோய்களைக் கையாள்வதற்கான ஏற்பாடுகளைக் கொண்ட அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

சம்பந்தப்பட்ட துறையில் நிபுணர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலைப் பெற்று தொற்று நோய் சூழ்நிலையை கையாளத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ தேசிய சபையை நிறுவ இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின்படி செயல்படுவது அவசியமாகும்.

No comments:

Post a Comment