உரிய திட்டங்களை கல்வியமைச்சு முன்வைத்தால் பாடசாலைகளை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்படும் - இதுவரை சூழல் சாதகமாக இல்லை என்கிறார் ஹேமந்த ஹேரத் - News View

Breaking

Wednesday, September 8, 2021

உரிய திட்டங்களை கல்வியமைச்சு முன்வைத்தால் பாடசாலைகளை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்படும் - இதுவரை சூழல் சாதகமாக இல்லை என்கிறார் ஹேமந்த ஹேரத்

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான உரிய திட்டங்களை கல்வி அமைச்சு முன்வைக்கும் பட்சத்தில் அதற்கான அனுமதி வழங்கப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதுவரையில், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான சிறந்த சூழல் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாளாந்தம் தொற்று உறுதியாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டு வருகின்றது.

எனினும், கொரோனா பரிசோதனைகள் தொடர்ந்தும் பாரியளவில் மேற்கொள்ளப்படுகின்றன.

ஒரு சில நேரங்களில் நாளாந்த நோயாளர்களின் முழு அறிக்கையும் சுகாதார அமைச்சுக்கு கிடைக்கப் பெறுவதில்லை. அதில் சில தாமதம் ஏற்படும். அவ்வாறான தரவுகள் தொற்று நோயியல் தடுப்பு பிரிவினால் பிந்திக் கிடைக்கப் பெற்ற தரவுகளாக மொத்த நோயாளர்களுடன் சேர்க்கப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment