பாகிஸ்தானை நியாயப்படுத்துவதாக பி.பி.ஸி தொகுப்பாளர் மீது கண்டனம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 8, 2021

பாகிஸ்தானை நியாயப்படுத்துவதாக பி.பி.ஸி தொகுப்பாளர் மீது கண்டனம்

தலிபான் ஆட்சியின் கீழ் ஆப்கானில் காணப்படும் அவலநிலை தொடர்பான பி.பி.ஸி நேர்காணலில் கருத்துகூற வந்த அமெரிக்க அரசியல் அவதானியை பேச விடாமல் தடுத்ததாக நேர்காணல் செய்த பிலிப்பா தோமஸ் மீது நேயர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நேர்காணலின்போது பாகிஸ்தானுக்கும் தலிபான்களுக்கும் இடையிலான நெருக்கம் தொடர்பாக அமெரிக்க அரசியல் அவதானி கிறிஸ்டின் ஃபெயார் விளக்க முற்பட்டபோது இடைமறித்த தோமஸ், இது தொடர்பாக பேச உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு விட்டது. இதை விட்டு விடுவோம் எனக் கூறினார்.

அப்போது அமெரிக்க அரசியல் அவதானி, நீங்கள் அவர்களுக்காக பிரசாரம் செய்கிறீர்கள் என்று குறிப்பிட்டார்.

அமெரிக்காவுக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதுவரும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான ஹுஸ்டன் நிலையத்தின் பணிப்பாளருமான ஹுசைன் அக்கானி இது பற்றி குறிப்பிடுகையில், ஒருவரின் கருத்தைச் சொல்ல விடாமல் மறிப்பது நியாயமல்லவென்றும் வேறொருவரை அழைத்து பாகிஸ்தான் சார்பான விஷயங்களை பேச விட்டிருக்கலாம் என்றும் தன் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து தலிபான் இயக்கத்தை (முஜாயிதீன்) பாகிஸ்தான் உருவாக்கி வளர்த்தது என்பதை பாகிஸ்தான் பலமுறை ஒப்புக் கொண்டிருப்பதாக இந்திய பத்திரிகையாளர் சுஹாசினி ஹைடர் தன் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தானின் ஜிஹாத் கொள்கை அழிவை ஏற்படுத்தியிருப்பதாகவும் இதில் மத்திய நிலை என்ற ஒன்று கிடையாது என்றும் மேற்காசிய விமர்சகர் கைல் ஹோர்டன் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment