இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் - தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் - News View

Breaking

Thursday, September 9, 2021

இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் - தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்

இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் எனத் தெரிவித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எவருக்கும் சட்டப்படியான சமத்துவம், சட்டப்படியான பாதுகாப்பை மத்திய அரசு மறுக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை இரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் தமிழக சட்ட சபையில் நேற்றையதினம் நிறைவேற்றப்பட்டது.

குறித்த தீர்மானத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக சட்டபேரவையில் தாக்கல் செய்து பேசிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்த சட்டம் மத நல்லிணக்கம், மத சார்பின்மை கோட்பாடுகளுக்கு உகந்ததாக இல்லை எனவும், இந்திய நாட்டின் ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை போற்றிப் பாதுகாக்க இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டம் இரத்து செய்யப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment