நியூசிலாந்து சம்பவ சூத்திரதாரி இலங்கையர் என்பதால் கவலை : அந்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவித்த அமைச்சர் தினேஷ் - News View

Breaking

Monday, September 6, 2021

நியூசிலாந்து சம்பவ சூத்திரதாரி இலங்கையர் என்பதால் கவலை : அந்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவித்த அமைச்சர் தினேஷ்

நியூசிலாந்தின் ஓன்லேன்ட நகரிலுள்ள பல்பொருள் அங்காடியில் தாக்குதல் நடத்திய கொடூரமான பயங்கரவாதி எமது நாட்டில் பிறந்தவரென கூறப்பட்டுள்ளது. இதற்காக கவலையடைவதுடன் நியூசிலாந்து அரசாங்கம் மற்றும் மக்களுடன் கவலையை பகிர்ந்து கொள்வதாக சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் தினேஸ் குணவர்த்தன மேலும் தெரிவிக்கையில், நியூசிலாந்தின் கொடூரமான பயங்கரவாதி எமது நாட்டில் பிறந்தவரென்று கூறப்பட்டுள்ளது. 

கவலைக்குரிய இந்த செயற்பாட்டை நாங்கள் கண்டிக்கின்றோம். நியூசிலாந்து அரசாங்கம் மற்றும் மக்களுடன், அவர்களின் கவலையை பகிர்ந்துகொள்கின்றோம். 

அவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்காது பயங்கரவாதத்தின் பயங்கர நிலைமையை அடையாளம் கண்டு நடவடிக்கையெடுப்பதற்கான முக்கியத்துவம் சர்வதேசத்தின் ஊடாக மீண்டும் உருவாகியுள்ளது என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment