2,000 ரூபா கொடுப்பனவு வெற்றிகரமாக நிறைவு : 24 இலட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது - News View

Breaking

Monday, September 6, 2021

2,000 ரூபா கொடுப்பனவு வெற்றிகரமாக நிறைவு : 24 இலட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது

தனிமைப்படுத்தல் ஊரடங்கால் வருமானம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் 100 வீதம் பூர்த்தியடைந்துள்ளதாக பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமையொழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி தெரிவித்தது. 

குறித்த கொடுப்பனவு சுமார் 24 இலட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக செயலணி குறிப்பிட்டுள்ளது. 

எவ்வாறாயினும், வருமானத்தை இழந்தவர்கள் எவருக்கேனும் 2,000 ரூபா கொடுப்பனவு கிடைக்கா விட்டால் முறையீடு செய்ய முடியும் என ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது. 

தமது முறையீட்டினை மாவட்ட அரசாங்க அதிபர்கள் அல்லது பிரதேச செயலாளர்களிடம் சமர்ப்பிக்குமாறும் அந்த செயலணி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment