''லாப் சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்க கூடாது" - News View

Breaking

Saturday, September 11, 2021

''லாப் சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்க கூடாது"

இராஜதுரை ஹஷான்

லாப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மீண்டும் அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்க கூடாது. நிறுவனங்களின் கோரிக்கைக்கு மாத்திரம் கவனம் செலுத்தாமல் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தரப்பில் இருந்து அரசாங்கம் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படாத காரணத்தினால் தமது நிறுவனத்திற்கு 8 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 291 ரூபாவிலும், 5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 114 ரூபாவிலும் அதிகரிக்க அனுமதி வழங்குமாறு லாப் நிறுவனம் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இக்கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டால் 12.5 கிலோ கிராம் நிறைவுடைய லாப் ரக சமையல் எரிவாயுவின் புதிய விலை 2147 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் புதிய விலை 858 ரூபாவாகவும் உயர்வடையும்.

கடந்த மாதம் 12.5 நிறையுடைய லாப் ரக சமையல் எரிவாயுவின் விலை 363 ரூபாவிலும், 5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயுவின் விலை 145 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டன. சமையல் எரிவாயு சிலிண்டர் இறக்குமதிக்கு அதிக செலவாகுகிறது. அதனால் தாம் நஷ்டமடைவதாக லாப் சமையல் எரிவாயு நிறுவனத்தினர் குறிப்பிடுகிறார்கள்.

லாப்ரக சமையல் எரிவாயுவின் தற்போதைய விலை அதிகரிப்பினால் மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்க் கொண்டுள்ளார்கள். ஆகவே மக்களின் தரப்பில் இருந்தும் அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad