கடந்த மூன்று ஆண்டுகளாக கனடாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சீனாவின் ஹுவாவி நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி மங் வென்சு விடுவிக்கப்பட்டு நாடு திரும்பியுள்ளார்.
சீனா இரு கனேடியர்களை விடுவித்த நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை மங் வென்சு விடுவிக்கப்பட்டு சென்சன் நகரை வந்தடைத்தார்.
மெங் கைது செய்யப்பட்டதற்கு பதிலடியாக சீனா கடந்த 2018 ஆம் ஆண்டு இரு கனடா நாட்டவர்களை உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்திருந்தது.
இந்நிலையில் இந்த கைதிகள் பரிமாற்றம் மூலம் சீனா மற்றும் கனடாவுக்கு இடையே நீடித்த இராஜதந்திர முறுகல் தணிந்துள்ளது.
அமெரிக்காவில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காகவே மெங் கனடாவில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். எனினும் கனடா மற்றும் அமெரிக்க வழக்குத் தொடுநர்களிடையே எட்டப்பட்ட உடன்படிக்கையை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.
அவர் விடுவிக்கப்படுவதற்கு முன், ஈரானுடன் ஹுவாவி நிறுவனம் வர்த்தக உடன்படிக்கை ஒன்றில் ஈடுபட்டு அமெரிக்க விசாரணையாளர்களை தவறாக வழிநடத்தியதாக மெங் ஒப்புக் கொண்டார்.
அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிராக போராடிய மெங் கடந்த மூன்று ஆண்டுகளாக கனடாவில் வீட்டுக் காவலில் இருந்தார்.
No comments:
Post a Comment