கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி - ஐ.டி.எச். வைத்தியசாலை பணிப்பாளர் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 12, 2021

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி - ஐ.டி.எச். வைத்தியசாலை பணிப்பாளர்

(எம்.ஆர்.எம்.வசீம்)

அங்கொடை தொற்று நோய்களுக்கான சிகிச்சை நிறுவனத்துக்கு (ஐ.டி.எச். வைத்தியசாலை) அனுமதிக்கப்பட்டிருக்கும் கொவிட் நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை 180 வரை குறைந்திருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஹசித்த அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 230 வரை அதிகரித்திந்த போதும் அது தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றது. அதேபோன்று கொவிட் மரணங்களும் வைத்தியசாலையில் குறிப்பிடத்தக்களவில் குறைவடைந்து வருகின்றது எனவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் கொவிட் மூன்றாம் அலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஐ.டி.எச். வைத்தியசாலையில் நோயாளர்களை அனுமதிக்க முடியாதளவுக்கு இடப்பற்றாக்குறை இருந்தது. என்றாலும் தற்போது அந்த நிலைமை இல்லை.

ஒட்சிசன் தேவையுடய கொவிட் நோயளர்களின் எண்ணிக்கையும் 30 தொடக்கம் 40 வரையில் குறைவடைந்திருக்கின்றது. இதற்கு முன்னர் ஒட்சிசன் தேவையுடைய கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 70 வரை இருந்தது.

அத்துடன் வைத்தியசாலையின் அனைத்து வாட்டுகளுக்கும் தேவையான ஒட்சிசன் வசதிகளை விநியோகிப்பதற்கு முறையான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது எனவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒட்சிசன் தேவைப்பாடு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அளவைவிட அதிகரித்திருந்தது. அதனால் இந்தியாவில் இருந்து ஒக்சீஜன் இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment