விசேட தேவையுடைய மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் பைசர் தடுப்பூசி - அமைச்சர் சன்ன ஜயசுமன - News View

Breaking

Sunday, September 12, 2021

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் பைசர் தடுப்பூசி - அமைச்சர் சன்ன ஜயசுமன

(எம்.மனோசித்ரா)

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு தடுப்பூசியை வழங்க முடியும் என்று பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதற்கமைய இவ்வாறான மாணவர்களுக்கான பைசர் தடுப்பூசி வழங்கும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்துகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஒக்டோபரில் 4 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்கப் பெறவுள்ளன. இந்த தடுப்பூசிகளை பொறுத்தமான முறையில் பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்கு பரிந்துரைகள் கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்க்கின்றோம்.

இது தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் குழு அவர்களின் பரிந்துரைகளை வழங்கியதன் பின்னர் அதற்கேற்ப அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இதேவேளை விசேட தேவையுடைய மாணவர்களுக்கு தடுப்பூசியை வழங்க முடியும் என்று பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதற்கமைய இவ்வாறான மாணவர்களுக்கான பைசர் தடுப்பூசி வழங்கும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment