(எம்.மனோசித்ரா)
கொவிட் பரவல் மூன்றாவது அலையில் ஆரம்பத்தில் காணப்பட்டதைவிட தற்போது நிலைமை சுமூகமடைந்திருந்தாலும் நாளாந்தம் ஆயிரத்திற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படுவதில் மாற்றம் ஏற்படவில்லை.
எனவே அன்றாட செயற்பாடுகளை கட்டுப்பாடுகளின்றி முன்னெடுப்பதற்கான திருப்திகரமான சூழல் இன்னும் உருவாகவில்லை என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
கொவிட் பரவல் தீவிரமடைவதில் தாக்கம் செலுத்தும் பிரதான காரணிகளில் ஒன்று பொது போக்கு வரத்துக்கள் ஆகும்.
எனவே நாடு திறக்கப்படுவதற்கு முன்னர் பொது போக்கு வரத்துக்களை எவ்வாறு செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துமாறு துறைசார் அதிகாரிகளிடம் கோருகின்றோம். அவ்வாறில்லை எனில் மீண்டும் முதலிலிருந்து சகல செயற்பாடுகளையும் ஆரம்பிக்க வேண்டியேற்படும் என்றார்.
No comments:
Post a Comment