பிரேஸில் - ஆர்ஜென்டீனா இடையேயான உலகக் கிண்ண தகுதிப் போட்டியில் பரபரப்பு : திடீரென இடைநிறுத்தம் - News View

About Us

About Us

Breaking

Monday, September 6, 2021

பிரேஸில் - ஆர்ஜென்டீனா இடையேயான உலகக் கிண்ண தகுதிப் போட்டியில் பரபரப்பு : திடீரென இடைநிறுத்தம்

பிரேஸில் மற்றும் ஆர்ஜென்டினா இடையேயான உலகக் கிண்ண தகுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை திடீரென இடைநிறுத்தப்பட்டது.

கொவிட்-19 பரவுவதைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை நான்கு வீரர்கள் மீறியுள்ளதாக அதிகாரிகள் தீர்மானித்ததின் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிரேஸிலிய அதிகாரிகள் ஆர்ஜென்டினா அணியைச் சேர்ந்த நான்கு பிரீமியர் லீக் வீரர்களைத் தனிமைப்படுத்தியிருந்தனர். அவர்கள் கொவிட்-19 தடுப்பு விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு தனிமைப்படுத்தல் விதிகளை மீறியவர்களான எமிலியானோ புவேண்டியா, எமிலியானோ மார்டினெஸ், கிறிஸ்டியானோ ரோமெரோ மற்றும் ஜியோவானி லோ செல்சோ - அனைவரும் உலகக் கிண்ண தகுதிச் சுற்றுக்காக இங்கிலாந்திலிருந்து பிரேஸிலுக்கு பயணம் செய்தவர்கள் ஆவர்.

பிரேசில் மற்றும் ஆர்ஜென்டினா அணிகளுக்கு இடையில் ஞாயிற்றுக்கிழமை உலகக் கிண்ண தகுதிச் சுற்று ஆட்டம் சாவோ பாலோ மைதானத்தில் இடம்பெறும் ‍வேளையில் வீரர்களை தனிமைப்படுத்த பிரேசிஸிலிய சுகாதார அதிகாரிகள் ஆடுகளத்தை ஆக்கிரமித்ததையும், சுகாதார அதிகாரிகள் குழுவைச் சுற்றி வீரர்கள் திரண்டிருப்பதை வெளிக்காட்டியது.

ஆட்டம் நிறுத்தப்பட்டவுடன் ஆர்ஜென்டினாவின் வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர். போட்டி தொடங்கிய சில நிமிடங்களில் இந்த நிகழ்வு நடந்தது. இடை நிறுத்தப்பட்ட போட்டி‍ மீண்டும் தொடங்கப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

No comments:

Post a Comment