லொஹான் ர‌த்வ‌த்த‌வின் செயலை க‌ண்டிப்ப‌த‌ற்கு கொஞ்ச‌மும் அருக‌தையற்ற‌வ‌ர் ம‌னோ க‌ணேச‌ன் : அபாயா அணிந்த ஆசிரியைக‌‌ளை மாண‌வ‌ர் முன் பாட‌சாலையை விட்டு வெளியேற்றிய‌வ‌ர் - முபாற‌க் அப்துல் ம‌ஜீத் - News View

Breaking

Monday, September 20, 2021

லொஹான் ர‌த்வ‌த்த‌வின் செயலை க‌ண்டிப்ப‌த‌ற்கு கொஞ்ச‌மும் அருக‌தையற்ற‌வ‌ர் ம‌னோ க‌ணேச‌ன் : அபாயா அணிந்த ஆசிரியைக‌‌ளை மாண‌வ‌ர் முன் பாட‌சாலையை விட்டு வெளியேற்றிய‌வ‌ர் - முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

க‌ட‌ந்த‌ ஆட்சியில் அமைச்ச‌ராக‌ இருந்த‌ ம‌னோ க‌ணேச‌ன் போன்றோர் பொக‌வ‌ந்த‌லாவை முஸ்லிம் ஆசிரியைக‌ள் அபாயா அணிந்து வ‌ந்த‌த‌ற்காக‌ அவ‌ர்க‌ளை கேவ‌ல‌ப்ப‌டுத்தி மாண‌வ‌ர்க‌ள் முன்பாக‌ பாட‌சாலையை விட்டு வெளியேற்றிய‌வ‌ர்க‌ள் இராஜாங்க‌ அமைச்ச‌ர் லொஹான் ர‌த்வ‌த்த‌வின் செயலை க‌ண்டிப்ப‌த‌ற்கு கொஞ்ச‌மும் அருக‌தையற்ற‌வ‌ர்க‌ள் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார்.

இது ப‌ற்றி அவ‌ர் ஊட‌க‌ங்க‌ளுக்கு தெரிவித்திருப்ப‌தாவ‌து, இராஜாங்க‌ அமைச்ச‌ர் சிறைச்சாலைக்குள் சென்று அங்குள்ள‌ குற்ற‌வாளிக‌ளைத்தான் அச்சுறுத்தினார். ஆனால் க‌ட‌ந்த‌ அர‌சில் அமைச்ச‌ராக‌ இருந்த‌ ம‌னோ க‌ணேச‌ன் போன்றோர் முஸ்லிம் பெண்க‌ளின் ஆடைக‌ளில் ச‌ண்டித்த‌ன‌ம் காட்டின‌ர்.

திருகோண‌ம‌லை ச‌ண்முகா வித்தியால‌ய‌ முஸ்லிம் ஆசிரியைக‌ள், பொக‌வ‌ந்த‌லாவை ஆசிரியைக‌ள் ஆடைக்காக‌ கேவ‌ல‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு பாடசாலைக‌ளில் இருந்து வெளியேற்ற‌ப்ப‌ட்டார்க‌ள். இந்த‌ ஈன‌ச்செய‌ல்க‌ளை அமைச்ச‌ராக‌ இருந்த‌ ம‌னோ க‌ணேச‌ன் நியாய‌ப்ப‌டுத்தி பேசினார்.

நாங்க‌ள் கொண்டு வ‌ந்த‌ இந்த‌ அர‌சாங்க‌த்தில் முஸ்லிம் பெண்க‌ள் சுத‌ந்திர‌மாக‌ வாழ்கிறார்கள். ச‌ண்முகா, பொக‌வ‌ந்த‌லாவ‌ போன்ற‌ ஆடைக்கான‌ இன‌த்துவேஷ‌ங்க‌ள் இல்லை. இ.பொ.ச‌ ப‌ஸ்க‌ளில் ஸ்டிக்க‌ர்க‌ள் இல்லை.

இத‌னால் தான் நாம் கூறினோம், ம‌னோ, த‌மிழ் கூட்ட‌மைப்பு போன்ற‌ த‌மிழ் இன‌வாத‌ அர‌சிய‌லை க‌ட்டுப்ப‌டுத்தும் தைரிய‌மும் ஆளுமையும் ராஜ‌ப‌க்‌ஷ த‌ர‌ப்புக்கே உண்டு என‌. இப்போது பெரும்பாலான‌ முஸ்லிம், த‌மிழ் பொது ம‌க்க‌ள் இன‌வாத‌ம் இன்றி ஒற்றுமையுட‌ன் வாழ்கின்ற‌ன‌ர். இத‌ற்குக் கார‌ண‌ம் ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌, பிர‌த‌ம‌ர் ம‌ஹிந்த‌ த‌லைமையிலான‌ நீதியான‌, இன‌வாத‌ம‌ற்ற‌ ஆட்சியாகும்.

தினகரன் 

No comments:

Post a Comment