முதல் முறை முகம் பார்த்த தலை ஒட்டிப் பிறந்த குழந்தைகள் - News View

Breaking

Tuesday, September 7, 2021

முதல் முறை முகம் பார்த்த தலை ஒட்டிப் பிறந்த குழந்தைகள்

இஸ்ரேலில் தலைகள் பின்புறமாக ஒட்டிப் பிறந்த இரு பெண் குழந்தைகள் மிக அரிதான சத்திர சிகிச்சை ஒன்றின் மூலம் பிரிக்கப்பட்டுள்ளனர்.

அந்த இரு குழந்தைகளும் முதல் முறை பரஸ்பரம் முகம் பார்த்துக் கொண்டனர்.

இரு குழந்தைகளினதும் உச்சந்தலை பகுதியை பொருத்தி இணைப்பது உட்பட சுமார் ஒரு மாத தயார் நிலைக்குப் பின்னரே கடந்த வாரம் பீர்ஷபா நகரில் உள்ள சொரோகா மருத்துவ நிலையத்தில் 12 மணி நேரம் இந்த சத்திரசிகிச்சை இடம்பெற்றது.

இந்த சந்திர சிகிச்சையில் இஸ்ரேல் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த பல நிபுணர்களும் பங்கேற்றிருந்தனர்.

பெயர்கள் குறிப்பிடப்படாத அந்த இரு குழந்தைகளும் நல்ல முறையில் குணமடைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. 

‘அவர்கள் தனியாக சுவாசிப்பதோடு உணவும் உட்கொள்கின்றனர்’ என்று சொரோகாவின் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சைப் பிரிவு தலைவர் எல்டட் சில்பெர்ஸ்டியன் இஸ்ரேல் தொலைக்காட்சி ஒன்றுக்கு தெரிவித்தார்.

உலகெங்கும் இவ்வகையான சத்திர சிகிச்சைகள் 20 முறைகள் மாத்திரமே இதுவரை நடத்தப்பட்டிருக்கும் நிலையில் இஸ்ரேலில் இடம்பெறுவது இது முதல்முறையாகும்.

No comments:

Post a Comment