இலங்கையர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசியை ஏற்றியமைக்கான காரணத்தை பாராளுமன்றில் தெரிவித்தார் செல்வம் அடைக்கலநாதன் - News View

About Us

Add+Banner

Breaking

  

Thursday, September 23, 2021

demo-image

இலங்கையர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசியை ஏற்றியமைக்கான காரணத்தை பாராளுமன்றில் தெரிவித்தார் செல்வம் அடைக்கலநாதன்

%25E0%25AE%259A%25E0%25AF%2586%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AE%25AE%25E0%25AF%258D
ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்

சீனாவை ஏற்றுக் கொள்ளும் நாடுகளுக்கு மட்டுமே இலங்கையர்கள் செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே பெருமளவான இலங்கையர்களுக்கு சீனத் தயாரிப்பான சினோபார்ம் கொரோனா தடுப்பூசியை அரசு ஏற்றுவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்)சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், கொரோனா தடுப்பூசி ஏற்றுவதில் அரசு பிரித்தாளும் தந்திரத்தைப் பயன்படுத்துகின்றது. சீனா, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் தயாரிப்புக்களான கொரோனா தடுப்பூசிகளை இந்த தந்திரத்தை பயன்படுத்தியே மாகாணத்துக்கு, மாவட்டத்துக்கு என பிரித்து, பிரித்து ஏற்றி வருகின்றது.

இதில் சீனத் தயாரிப்பான சினோபார்ம் கொரோனா தடுப்பூசியை பல நாடுகள் ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளன . ஆனால் இந்த தடுப்பூசியைத்தான் அரசு பெருமளவான இலங்கையர்களுக்கு ஏற்றுகின்றது. அதாவது சீனாவை ஏற்றுக் கொள்ளும் நாடுகளுக்கு மட்டுமே இலங்கையர்கள் பயணம் செய்ய வேண்டுமென்பதே இந்த அரசின் நோக்கமாகவுள்ளது.

சீன தடுப்பூசியை பல வெளிநாடுகள் ஏற்க மறுத்துள்ளதால் தான் இளைஞர், யுவதிகள் பலரும் இதனை ஏற்ற மறுக்கின்றனர். எனவே இலங்கையில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் திட்டம் முழுமையாக வெற்றி பெற வேண்டுமானால் எந்த தடுப்பூசியை ஏறினாலும் இலங்கையர்கள் வெளிநாடு செல்லக் கூடிய வழிவகைகளை அரசு ஏற்படுத்த வேண்டும். எனவே இது தொடர்பில் அரசு வெளிநாடுகளுடன் பேச்சு நடத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *