பால்மாவின் விலை அதிகரிக்கப்படுமா ? - News View

About Us

About Us

Breaking

Sunday, September 19, 2021

பால்மாவின் விலை அதிகரிக்கப்படுமா ?

எம்.மனோசித்ரா

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் பால்மா இறக்குமதி நிறுவனங்களால் அதன் விலையை அதிகரிப்பதற்கு தொடர்ச்சியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் அரசாங்கம் அதற்கு அனுமதியளிக்கவில்லை என நுகர்வோர் அதிகார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையிலேயே பால்மா அதிகரிப்பு தொடர்பில் நேற்று சனிக்கிழமை இரவு பால்மா இறக்குமதியாளர்களுக்கும் நிதி அமைச்சருக்குமிடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவாலும், 400 கிராம் பால்மாவினை 100 ரூபாவாலும் அதிகரிக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்பிற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்காக நுவர்வோர் அலுவல்கள் அதிகார சபைக்கு இது குறித்து இவ்வாரம் அறிவிக்கப்படவுள்ளது.

நுவர்வோர் அலுவல்கள் அதிகார சபை அனுமதியளிக்கும் பட்சத்தில் பால்மாவின் விலை அதிகரிப்பு இவ்வாரம் முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் முன்னர் 400 கிராம் பால்மாவின் விலை 380 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 945 ரூபாவாகவும் காணப்பட்டது.

எனினும் இறக்குமதி நிறுவனங்களின் கோரிக்கைக்கு அமைய விலை அதிகரிக்கப்பட்டால் 400 கிராம் பால்மாவின் புதிய விலை 480 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 1145 ரூபாவாகவும் உயர்வடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment