சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Sunday, September 19, 2021

சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை

(எம்.ஆர்.எம்.வசீம்)

அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்குள் சீனி இறக்குமதிக்கு அனுமதி அளிக்கா விட்டால் சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருக்கின்றது என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் கடந்த வருடம் இறுதிப் பகுதியில் சீனிக்கான இறக்குமதி வரியை 25 சதம் வரை குறைத்து விட்டு தேவைக்கும் அதிகமானளவு சீனி நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் சீனி இறக்குமதி செய்வதை அரசாங்கம் தடை செய்திருந்தது.

அதன் பிரகாரம் தற்போது நாட்டில் கையிருப்பில் இருக்கும் சீனி தொகை எதிர்வரும் ஒன்றரை மாதங்களுக்கே போதுமானது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் நாட்டுக்கு ஒரு மாதத்துக்கான சீனி தேவைப்பாடு 45 ஆயிரம் மெட்ரிக் தொன்னாகும். தற்போது கைவசம் இருப்பது சுமார் 75 ஆயிரம் மெட்ரிக் தொன் வரையாகும். இவ்வாறான நிலையில் சீனி இறக்குமதிக்கு அனுமதி வழங்கா விட்டால் எதிர்காலத்தில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment