ஒவ்வொரு ஆண்டும் பணியின் போது இத்தனை லட்சம் பேர் இறக்கிறார்களா? - உலக சுகாதார ஸ்தாபனம் அதிர்ச்சி தகவல் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 19, 2021

ஒவ்வொரு ஆண்டும் பணியின் போது இத்தனை லட்சம் பேர் இறக்கிறார்களா? - உலக சுகாதார ஸ்தாபனம் அதிர்ச்சி தகவல்

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 லட்சம் பேர் வேலை தொடர்பான காரணங்களால் உயிரிழப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆகியவை சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியது.

அந்த ஆய்வில் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் வேலை தொடர்பான காரணங்களால் உயிரிழப்பதாக தகவல் வெளியானது. சிலர் நீண்ட நேரம் வேலை செய்வதாலும், காற்று மாசுபாடு காரணமாகவும் இறந்துள்ளனர்.

2016ஆம் ஆண்டில் வேலைச் சூழல் காரணமாக ஏற்பட்ட நோய்கள், காயங்கள் ஆகியவற்றால் 19 லட்சம் பேர் இறந்ததாகத் தெரிய வந்தது.

இந்த ஆய்வில் மொத்தம் 19 வேலையிடம் சார்ந்த அபாயங்கள் இருப்பதும் தெரியவந்தது. காற்று மாசுபாடு, ஆஸ்துமாவை ஏற்படுத்தக் கூடிய ரசாயனங்கள், புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய ரசாயனங்கள், இரைச்சல் ஆகிய அம்சங்கள் இந்த ஆய்வில் கருத்தில் கொள்ளப்பட்டன.

தென் கிழக்காசியா, மேற்கு பசிபிக் பகுதிகளில் உள்ள ஊழியர்களிடம் வேலை தொடர்பான இறப்பு விகிதம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்ததாக ஆய்வு தெரிவிக்கிறது.

இது தொடர்பாக பேசிய உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கெப்ரியேஸஸ், இந்த புள்ளிவிவரங்கள் தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. ஆய்வு முடிவுகள் உலக நாடுகள் நடவடிக்கை எடுக்கத் தூண்டுதலாக அமையும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment