விகாரையிலுள்ள அரும்பொருளை திருட முற்பட்ட புதையல் திருடர்கள் : ஒருவர் கைது, நால்வர் தப்பியோட்டம் - News View

Breaking

Wednesday, September 1, 2021

விகாரையிலுள்ள அரும்பொருளை திருட முற்பட்ட புதையல் திருடர்கள் : ஒருவர் கைது, நால்வர் தப்பியோட்டம்

யால தேசிய பூங்காவிற்குள் அமைந்துள்ள, வரலாற்று புகழ் மிக்க தலத்திலுள்ள சித்துல்பவ்வ விகாரையில் அமைந்துள்ள அரும் பொருளொன்றினை திருட முற்பட்ட திருடர்களால் அதற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் பெறுமதி மிக்க, வரலாற்று தலத்திலுள்ள குறித்த விகாரையிலுள்ள சிறிய தூபியொன்றே இவ்வாறு புதையல் திருடர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக, தொல்பொருள் பணிப்பாளர் நாயகம், பேராசிரியர் அநுர மனதுங்க தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நால்வரும் தப்பியோடி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, குறித்து சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment