உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் சூத்­தி­ர­தா­ரியும், தொடர்புடையோரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே முஸ்லிம்களின் நிலைப்பாடு : ஜனாதிபதி, பிரதமர், சிவில் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டோருக்கு உலமா சபை கடிதம் மூலம் அறிவிப்பு - News View

Breaking

Sunday, September 5, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் சூத்­தி­ர­தா­ரியும், தொடர்புடையோரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே முஸ்லிம்களின் நிலைப்பாடு : ஜனாதிபதி, பிரதமர், சிவில் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டோருக்கு உலமா சபை கடிதம் மூலம் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ர­தாரி மற்றும் இத்­தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்ட அனை­வரும் இனங்­கா­ணப்­பட்டு அவர்கள் சட்­டத்தின் முன்­நி­றுத்­தப்­பட வேண்டும். அவர்­க­ளுக்கு தண்­டனை வழங்­கப்­பட வேண்டும். இதுவே இலங்கை முஸ்­லிம்­களின் நிலைப்­பா­டாகும். முஸ்லிம் சமூகம் இவ்­வா­றான கொடூர செயலை ஒரு­போதும் அனு­ம­திக்­காது. தாக்­கு­தலில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி நிலை­நாட்­டப்­பட வேண்டும் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­வுக்கு கடி­த­மொன்­றினை அனுப்பி வைத்­துள்­ளது.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் கையொப்­ப­மிட்டு கடந்த ஜூன் மாதம் அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, இந்­நாட்டின் முக்­கிய முஸ்லிம் சபை­யான அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை­யிடம் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான விசா­ர­ணைகள் பற்றி முஸ்லிம் சமூகம் கேள்­விகள் கேட்­கி­றது. முஸ்லிம் சமூகம் சமா­தா­னத்தை விரும்பும் சமூ­க­மாகும். ஆயி­ரக்­க­ணக்­கான வரு­டங்கள் இந்­நாட்டில் நாட்டுப் பற்­று­டைய சமூ­க­மாக வாழ்ந்து வரு­கி­றது. எல்.ரி.ரி.ஈ.யினரின் யுத்தம் உட்­பட அனைத்து கல­வ­ரங்­களின் போதும் முஸ்லிம் சமூகம் நாட்டுப் பற்­றினை உறுதி செய்­துள்­ளது. முஸ்லிம் சமூகம் தனது ஏனைய சமூ­கங்கள் சந்­தேகம் கொள்­வதை ஒரு­போதும் விரும்­ப­வில்லை. இனங்­க­ளுக்­கி­டையில் மீண்டும் நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு ஒரே வழி உயிர்த்த ஞாயிறு விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்தி குற்­ற­வா­ளி­க­ளுக்கு உரிய தண்­டனை வழங்­கு­வ­தாகும்.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையும் ஏனைய அமைப்­பு­களும் முஸ்லிம் சமூ­கத்­தினுள் தீவ­ர­வாதம் மற்றும் அடிப்­ப­டை­வாதம் என்­ப­ன­வற்­றுக்கு இட­ம­ளிக்­காது என்­பதை உறுதி செய்­வ­தற்கு அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்டு வரு­கின்­றன.

எங்­க­ளுக்கு உள்ள மிகவும் குறை­வான வளங்­களைப் பயன்­ப­டுத்தி எமது இளைஞர் சமு­தா­யத்தை நாம் தொட­ராக கண்­கா­ணித்து வரு­கிறோம். உலமா சபை­யி­னதும் முஸ்லிம் சமூ­கத்­தி­னதும் முக்­கி­ய­மான பணி இந்­நாட்டின் தேசிய பாது­காப்­பினை உறுதி செய்­வ­தற்கு ஒத்­து­ழைப்­ப­தாகும் என்­பதை கூறிக்­கொள்ள விரும்­பு­கிறோம்.

நீங்கள் இந்­நாட்டில் பொறுப்­பா­னவர் என்ற வகையில் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் விசா­ர­ணை­களை மிக விரைவில் பூர்த்தி செய்து குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக வழக்கு தொடர்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கு­மாறு சம்­பந்­தப்­பட்ட நிறு­வ­னங்­க­ளுக்கும் அதி­கா­ரி­க­ளுக்கும் ஆலோ­சனை வழங்­கு­வீர்கள் என்றால் நாம் மிகவும் நன்­றி­யு­டை­ய­வர்­க­ளாக இருப்போம்.

நியா­ய­மான துரி­த­மான விசா­ர­ணைகள் மூலம் இச்­சம்­ப­வத்தின் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­களை இனங்­கண்டு எவ்­வித பேதங்­க­ளு­மின்றி அனை­வ­ருக்கும் நீதியை நிலை­நாட்­டு­வீர்கள் என்று நாம் பல­மாக நம்­பு­கிறோம்.

இந்­நாட்டின் அபி­வி­ருத்­திக்­காக நீங்கள் மேற்­கொள்ளும் அனைத்து முயற்­சி­க­ளுக்கும் அகில இலங்கை உலமா சபையும் முஸ்லிம் சமூ­கமும் பூரண ஒத்­து­ழைப்­பு­களை வழங்கும் என கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களின் விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்தும் படியும், உண்­மை­யான சூத்­தி­ர­தா­ரியை இனங்­கண்டு நீதியை நிலை­நாட்­டு­வ­துடன், குற்­ற­வா­ளி­க­ளுக்கு உரிய தண்­டனை வழங்­கு­மாறு கோரி அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ, பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சர் சரத் வீர­சே­கர மற்றும் பாது­காப்­பு­செ­ய­லாளர் கமல் குண­ரத்ன ஆகி­யோ­ருக்கும் கடி­தங்­களை அனுப்பி வைத்­துள்­ளது.

மேலும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை தாக்­கு­த­லினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் நீதிக்­காக ஏற்­க­னவே குரல் கொடுத்­துள்­ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று அப்­பாவி வழி­பாட்­டா­ளர்கள் மற்றும் பலர் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­களின் பின்­ன­ணியில் உள்ள சூத்­தி­ர­தா­ரி­களை அடை­யாளம் கண்டு, அவர்­களை சட்­டத்தின் முன் நிறுத்­து­மாறு முன்­வைக்­கப்­படும் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் வேண்­டு­கோளை உலமா சபை ஆத­ரித்­துள்­ளது.உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் கண்­டு­பி­டிக்­க­வில்லை என்­ப­தற்­கா­கவும் பாதிக்­கப்­பட்ட அப்­பாவி மக்­க­ளுக்கு நீதி­கி­டைக்­க­வில்லை என்­ப­தற்­கா­கவும் நாங்கள் ஆழ்ந்த வருத்­தத்தைத் தெரி­விக்­கிறோம். பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் உணர்­வு­க­ளுடன் நாங்கள் முழு மன­துடன் இணைந்து கொள்­வ­தோடு குற்­ற­வா­ளி­களை இனங்­கா­ணு­வதில் அனைத்து இலங்­கை­யர்­களும் ஒன்­று­ப­டு­மாறும் உலமா சபை கோரிக்கை விடுத்­துள்­ளது.

பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் மற்றும் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் வேண்­டு­கோளை நேர்த்­தி­யாக சிந்­திக்­கக்­கூ­டிய மக்கள் அனை­வரும் ஆத­ரிக்­கு­மாறும் வேண்­டு­கி­றது என்றும் தெரி­வித்­துள்­ளது.

முஸ்லிம் தலை­மைகள் மௌனமா?
இதே­வேளை உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் முஸ்லிம் மக்கள் நடத்­திய தாக்­குதல் அல்ல. சிறிய அடிப்­ப­டை­வாத குழு­வொன்று நடத்­திய தாக்­குதல் என்­பதே பெரும்­பான்­மை­யோரின் கருத்து. இக்­க­ருத்து ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு விட்­டது என இளம் கிறிஸ்­தவ சமூக செற்­பாட்­டாளர் செஹான் மாலக கமகே தெரி­வித்­துள்ளார்.

அத்­தோடு, அவர் மேலும் கருத்­து­வெ­ளி­யி­டு­கையில், தாக்­கு­த­லினால் குறிப்­பாக கிறிஸ்­த­வர்­களும், முஸ்­லிம்­க­ளுமே பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள். பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் உலமா சபை, சூரா சபை உள்­ள­டங்­கிய முஸ்லிம் தலை­மைகள் ஆழ்ந்த மௌனத்தில் இருக்­கி­றார்கள். அதற்­காக நாம் கவ­லைப்­ப­டு­கிறோம் என்றும் தெரி­வித்தார்.

ஆனால் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் மௌனத்தில் இருக்­கி­றது. பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­காக குரல் கொடுக்­க­வில்லை என்­ப­தனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் இடம்­பெற்­றி­தி­லி­ருந்து உலமா சபை மாத்­தி­ர­மல்ல, சூரா சபை உள்­ளிட்ட முஸ்லிம் சிவில் சமூக அமைப்­புகள் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­காக இன்­று­வரை குரல் கொடுத்து வந்­துள்­ளன.

தாக்­கு­தலின் சூத்­தி­ர­தா­ரிகள் மற்றும் அத­னுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் அவர்கள் யாராக இருந்­தாலும் தரா­தரம் பாராது தண்­டிக்­கப்­பட வேண்­டு­மென்றே கோரி வரு­கின்­றன. இதனை எவ­ராலும் மறுக்க முடி­யாது.

முஸ்­லிம்கள் நூற்­றாண்டு கால­மாக இந்­நாட்டின் ஏனைய சமூ­கங்­க­ளுடன் நல்­லு­ற­வுடன் வாழ்­கி­றார்கள். அவர்கள் தேசப்­பற்று மிக்­க­வர்கள். இதனை வர­லாறு உறுதி செய்­துள்­ளது.

முஸ்லிம் சமூ­கத்தின் ஒரு சிறு குழு­வினர் மேற்­கொண்ட தாக்குதலுக்கு முஸ்லிம் சமூகம் பொறுப்பாகிவிட முடியாது.

(ஏ.ஆர்.ஏ.பரீல்) Vidivelli

No comments:

Post a Comment