லொகான் ரத்வத்தையை உடனடியாக பதவியிலிருந்து நீக்குங்கள் : ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார் எதிர்க்கட்சித் தலைவர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 15, 2021

லொகான் ரத்வத்தையை உடனடியாக பதவியிலிருந்து நீக்குங்கள் : ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார் எதிர்க்கட்சித் தலைவர்

இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தவுக்கு எதிராக அண்மையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சத்தியின் தலைவர் தெரிவித்துள்ளதாவது, அனுராதபுரம் சிறைச்சாலைக் கட்டடத் தொகுதியில் அரசாங்க அமைச்சரின் இழிவான மற்றும் சட்ட விரோதமான நடத்தையை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்தக் கேவலமான சட்டவிரோத செயல் நமது நாட்டின் அராஜக நிலைக்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டாகும்.

எங்கள் தாய்நாட்டில் வாழும் அனைத்து குடிமக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதில் இந்த அரசுக்கு கடப்பாடு உள்ளது.

இந்த சட்ட விரோதமான மற்றும் கேவலமான செயல் நமது நாட்டில் மனித உரிமைகளின் நிலைமை வேகமாக குறைந்து வருவதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும்.

இந்த அமைச்சரை உடனடியாக பதவியில் இருந்து நீக்குமாறு நான் ஜனாதிபதியை கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

செப்டம்பர் 12 ஆம் திகதி மாலை அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற சிறைச்சாலைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகளை வரவழைத்து, அவர்களில் இருவரை அவருக்கு முன்னால் மண்டியிட வைத்து, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment