அராசங்கத்தின் முட்டாள்த்தனமான முடிவால் தீவிர விளைவுகள் மிக விரைவில் உணரப்படும் - எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச - News View

About Us

About Us

Breaking

Sunday, September 12, 2021

அராசங்கத்தின் முட்டாள்த்தனமான முடிவால் தீவிர விளைவுகள் மிக விரைவில் உணரப்படும் - எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

(எம்.மனோசித்ரா)

முறையற்ற ஒரு மூடிய பொருளாதாரத்தை நோக்கி நகர்வதன் மூலம் உலகில் வேறெந்த நாடும் எடுக்காத முட்டாள்த்தனமான முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது. அதன் தீவிர விளைவுகள் மிக விரைவில் உணரப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மக்கள் எதிர்கொண்டுள்ள துரதிஸ்டவசமான சூழலிலிருந்து அவர்களை மீட்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும். அவ்வாறில்லை எனில் அரசாங்கத்தின் விதியை மக்கள் நீதிமன்றத்தின் மூலம் முடிவு செய்ய வேண்டியேற்படும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொவிட் தொற்றின் காரணமாக வேறெந்த நாட்டிலும் ஏற்படாத வங்குரோத்து நிலைமை இலங்கையில் ஏற்பட்டுள்ளது. தன்னிச்சையான தூர நோக்கற்ற செயற்பாடுகள் மற்றும் பொறுப்பற்ற நிர்வாகத்தினால் நாடு இந்த நிலைமையை அடைந்துள்ளது.

அரசாங்கம் தனது அரசியல் மற்றும் சுயநல நிகழ்ச்சி நிரல்களுடன் இணைந்து நாட்டு மக்களின் வாழ்வை நசுக்குகிறது. இந்த துயரத்தினை எதிர்கால சந்ததியினரும் அனுபவிப்பார்கள் என்பதை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும்.

முறையற்ற ஒரு மூடிய பொருளாதாரத்தை நோக்கி நகர்வதன் மூலம் உலகில் வேறெந்த நாடும் எடுக்காத முட்டாள்த்தனமான முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது. அதன் தீவிர விளைவுகள் மிக விரைவில் உணரப்படும். நாட்டில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் தீர்வு இல்லை.

ஒரு வேளை உணவை உண்பதில் கூட சிக்கலை எதிர்கொண்டுள்ள மக்களை தமது மூன்று வேளை உணவை ஒரு வேளையாக மட்டுப்படுத்திக் கொள்ளுமாறு சில அமைச்சர்கள் அறிக்கைகளை வெளியிடுகின்றனர். இவ்வாறான நிலையில் கூட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பொருட்களின் விலை அதிகரிப்பால் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடு என்ற வரிசையில் இலங்கை காணப்படுகிறது. பிரச்சினைகள் ஏற்படும் போது அவற்றுக்கு நிரந்தர தீர்வை வழங்காத அரசாங்கம் மண்டை ஓடுகளை மாற்றிக் கொண்டிருக்கிறது.

மக்கள் எதிர்கொண்டுள்ள துரதிஸ்டவசமான சூழலிலிருந்து அவர்களை மீட்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும். அவ்வாறில்லை எனில் அரசாங்கத்தின் விதியை மக்கள் நீதிமன்றத்தின் மூலம் முடிவு செய்ய வேண்டியேற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment