கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பெறாத அல்லது முழுமையான கொரோனா சோதனை செய்து கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைவதற்கு எகிப்து கல்வி அமைச்சு தடை விதித்துள்ளது.
தடுப்பூசி பெறாத ஊழியர்கள் வாரம் ஒன்றுக்கு இரு பீ.சி.ஆர் சோதனைக்காக கட்டணம் செலுத்த வேண்டும் என்று கல்வி அமைச்சர் தாரிக் ஹவ்கி தெரிவித்துள்ளார்.
இந்த இரு சோதனைகளுக்கும் சுமார் 100 டொலர்கள் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
எகிப்தில் கொரோனா வைரஸுக்கு எதிராக இன்னும் 40 வீதமான ஆசிரியர்கள் தடுப்பூசி பெறவில்லை என்று உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
எகிப்தில் இரண்டு வாரங்களில் கல்வி ஆண்டு ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment