(எம்.மனோசித்ரா)
சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் தெரிவிக்கப்படும் விடயங்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும். என் மீது சேரு பூசும் நோக்கில் இவ்வாறான போலி பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நான் சிறைச்சாலைகளுக்குள் செல்லும் போது கையடக்க தொலைபேசியைக் கூட கொண்டு செல்வதில்லை என்று இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உட்படுத்தாமல், உரிய விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இடமளித்துத்தான் தற்போது நான் இருக்கின்றேன்.
சிலர் கூறுவதைப் போன்று சி.சி.டீ.வி. காணொளிகள் எவையும் அழிக்கப்படவில்லை. அவ்வாறு செய்யவும் முடியாது என்றும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment