கொரோனா தொற்றாளர்கள் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாமா? : விளக்கமளிக்கிறார் வைத்திய நிபுணர் வாசன் ரட்ணசிங்கம் - News View

Breaking

Wednesday, September 8, 2021

கொரோனா தொற்றாளர்கள் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாமா? : விளக்கமளிக்கிறார் வைத்திய நிபுணர் வாசன் ரட்ணசிங்கம்

(நா.தனுஜா)

கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதிலிருந்து 28 நாட்கள் முடிவடைந்த பின்னரோ அல்லது அவர் முழுமையாகக் குணமடைந்து 14 நாட்கள் பூர்த்தியடைந்ததன் பின்னரேயே தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வைத்திய நிபுணர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் 20 வயதிற்கு மேற்பட்டோருக்கான கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் பணிகள் ஆரம்பமாகியிருக்கும் நிலையில், கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது குறித்து பல்வேறு சந்தேகங்கள் காணப்படுகின்றன. அவை குறித்து தெளிவுபடுத்துகையிலேயே வைத்தி நிபுணர் வாசன் ரட்ணசிங்கம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அண்மைக் காலத்தில் கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் நாட்டு மக்கள் அதிக நாட்டம் காண்பித்து வருகின்றார்கள்.

முதலாம் கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட ஒருவருக்கு இரண்டாம் கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்குரிய காலப்பகுதியில் தொற்று ஏற்படும் பட்சத்திலும் மேற்குறிப்பிட்ட கால அளவின் அடிப்படையிலேயே இரண்டாம் கட்டத் தடுப்பூசியைப் பெற வேண்டும்.

கேள்வி கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படுகின்ற போதிலும் பி.சி.ஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனையின் மூலம் தொற்று ஏற்பட்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளாமல், தாமாகவே சுய தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் தடுப்பூசியைப் பெறுவதில் எத்தகைய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்?

பதில் கொவிட்-19 வைரஸ் தொற்று அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில், பரிசோதனை மூலம் தொற்று ஏற்பட்டிருக்கின்றதா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும். அவ்வாறு உறுதிப்படுத்திக் கொண்டதன் பின்னர் மேற்கூறப்பட்டவாறான கால அளவுகளின் அடிப்படையில் தடுப்பூசியைப் பெறமுடியும் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment