மெக்சிக்கோவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் - ஒருவர் பலி - News View

Breaking

Wednesday, September 8, 2021

மெக்சிக்கோவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் - ஒருவர் பலி

வட அமெரிக்க கண்டத்தில் உள்ள மெக்சிக்கோ நாட்டில் குரெரோவின் அகாபுல்கோவில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட திடீர் நில நடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மெக்சிக்கோ சிட்டியில் இருந்து 300 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள பெப்லோமாடரோ என்ற இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நில நடுக்கம் உணரப்பட்டது.

நில நடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளது. அப்போதிருந்து, 92 நில நடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவைகள் ரிச்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளன.

இதனால் கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியது. மக்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

நில நடுக்கம் பெரிய அளவில் இருந்தாலும் இதனால் சேதம் ஏதும் ஏற்பட்டதா என்பது பற்றி இதுவரை தகவல் இல்லை. அங்குள்ள கிராமப் பகுதிகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. முக்கிய பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர்.

வட அமெரிக்க டெக்டோனிக் தகட்டின் விளிம்பில் அமைந்துள்ளதால் மெக்சிகோவில் பூகம்பங்கள் அசாதாரணமானது அல்ல.

கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டெம்பரிலும் மற்றும் 1985 செப்டெம்பரிலும் 8.0 ரிச்டர் அளவில் இரண்டு பாரிய நில நடுக்கங்கள் ஏற்பட்டு 9,500 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்த நில நடுக்கம் நகரத்தில் ஒரு பெரிய வடுவை ஏற்படுத்தியது, இதன் விளைவாக கட்டிடக் குறியீடுகளில் மாற்றங்கள் மற்றும் நிலநடுக்கங்களுக்கு எதிராக அதிக பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

No comments:

Post a Comment