மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியொன்றில் அனுமதி இல்லாது ட்ரோன் கமராக்களை இயக்கிய குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 32 மற்றும் 33 வயதுடைய மஹரகம பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்நிலையில் அவர்களை இன்றைய தினம் (27) கங்கொடவில நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் பொது இடங்களில் ட்ரோன்களை இயக்குவது தடை செய்யப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து நாட்டில் ட்ரோன்கள் இயக்கம் குறித்து கடுமையான வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அனைத்து ட்ரோன்களையும் இலங்கையில் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு பாதுகாப்பு அமைச்சில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment