இஸ்ரேல் ஏவுகணை பாதுகாப்புக்கு அமெரிக்கா ஒரு பில்லியன் டொலர் நிதி - News View

About Us

About Us

Breaking

Sunday, September 26, 2021

இஸ்ரேல் ஏவுகணை பாதுகாப்புக்கு அமெரிக்கா ஒரு பில்லியன் டொலர் நிதி

இஸ்ரேலின் ஏவுகணை பாதுகாப்பு முறையான அயர்ன் டோம் அமைப்புக்கு மேலதிகமாக ஒரு பில்லியன் டொலரை வழங்குவதற்கு அமெரிக்க பாராளுமன்றத்தில் ஒப்புதல் கிடைத்துள்ளது.

இந்த பாதுகாப்பு முறைக்கு அமெரிக்காவின் ஆதரவை கணிசமான அளவு அதிகரிக்கும் வகையில், கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பில் 420 வாக்குகளால் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக ஒன்பது வாக்குகளே கிடைத்தன.

இந்த சட்டமூலம் தற்போது செனட் சபைக்கு அனுப்பப்பட்டிருப்பதோடு அது அங்கு இலகுவாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இதற்கு ஒப்புதல் அளித்து ஜனாதிபதி ஜோ பைடன் கையெடுத்திட வேண்டும்.

எனினும் இஸ்ரேல் மீது அமெரிக்கா அளிக்கும் ஆதரவு தொடர்பில் அமெரிக்க பாராளுமன்றத்தில் விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன

2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி பராக் ஒபாமா கையெழுத்திட்ட பத்து ஆண்டு புரிந்துணர்வு உடன்படிக்கை மூலம் இஸ்ரேல் ஆண்டுதோறும் 3.8 பில்லியன் டொலர் அமெரிக்க இராணுவ உதவியை பெறுகிறது. அதில் 500 மில்லியன் ஏவுகணை பாதுகாப்பு முறைக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment