இராஜதுரை ஹஷான்
அமைச்சர்கள் அல்லது இராஜாங்க அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டபோது அதனால் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகக் கூடாது என்ற நோக்கத்தில் இராஜிநாமா செய்தமையின் ஊடாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை அரசியல்வாதிகளுக்கு ஒரு முன்னுதாரனமாக உள்ளார் என்று கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
வெல்லம்பிடிய பகுதியில் அமைந்துள்ள இப்ராஹிம் குடும்பத்தினருக்கு சொந்தான செப்பு கைத்தொழிற்சாலையை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை அரசியல்வாதிகளுக்கு ஒரு முன்னுதாரனமாக உள்ளார். அமைச்சர்கள் அல்லது இராஜாங்க அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டபோது அதனால் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாக கூடாது என்று இதுவரை எவரும் அமைச்சு பதவிகளையோ, இராஜாங்க அமைச்சு பதவிகளையோ துறக்கவில்லை.
சிறைச்சாலை விவகாரத்தில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையினால் தவறு இழைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை நடவடிக்கைகள் முன்னெக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment