நீண்ட கால கொள்கைத்திட்டம் செயற்படுத்தப்பட்டால் மாத்திரமே நாட்டை முன்னேற்ற முடியும் - மைத்திரிபால - News View

Breaking

Sunday, September 12, 2021

நீண்ட கால கொள்கைத்திட்டம் செயற்படுத்தப்பட்டால் மாத்திரமே நாட்டை முன்னேற்ற முடியும் - மைத்திரிபால

(இராஜதுரை ஹஷான்)

பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஓரிரு நாட்களுக்குள் சீர் செய்ய முடியாது. நீண்ட கால கொள்கைத்திட்டம் செயற்படுத்தப்பட்டால் மாத்திரமே நாட்டை முன்னேற்ற முடியும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர்,மத்திய வங்கியின் ஆளுநர் நியமனம் குறித்து ஊடகவியலாளர்கள் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மத்திய வங்கி ஆளுநர் விவகாரத்தில் நபரை அடிப்படையாக கொண்ட பிரச்சினைகள் ஏதும் கிடையாது. பொருளாதார நிபுணத்துவம் கொண்டவர்கள் உரிய பதவிக்கு நியமிக்கப்படுகிறார்கள். இவ்விடயத்தில் மாற்று கருத்துக்கள் குறிப்பிட முடியாது.

பல்வேறு காரணிகளினால் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலைமைக்கு அமைய பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஓரிரு நாட்களில் சீர் செய்ய முடியாது.

நீண்ட கால கொள்கைத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய செயற்திட்டம் வகுக்கப்பட வேண்டும். பொருளாதாரம், சுகாதாரம், அரசியல் என அனைத்து துறைகளையும் உள்ளிடக்கிய வகையில் பலமான கொள்கை வகுக்கப்பட வேண்டும்.

பொருளாதார கொள்கை ஆட்சி மாற்றத்திற்கு அமைய மாற்றமடைவதால் சிறந்த முன்னேற்றத்தை அடைய முடியாதுள்ளது. நிலையாக கொள்கை திட்டம் வகுக்காமல் நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது. என்றார்.

No comments:

Post a Comment