9 பெண்களை பலாத்காரம் செய்த உலக சுகாதார ஊழியர்கள் - கொங்கோ அரசு விசாரணை - News View

About Us

About Us

Breaking

Thursday, September 30, 2021

9 பெண்களை பலாத்காரம் செய்த உலக சுகாதார ஊழியர்கள் - கொங்கோ அரசு விசாரணை

கொங்கோவில் நிவாரணப் பணியாளர்கள், பாலியல் ரீதியாக மக்களைத் துன்புறுத்தியது குறித்து, அதிர்ச்சி அடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்தகைய குற்றங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாது என அதன் தலைவர் டெட்ரோஸ் கெப்ரியேஸஸ் கூறினார்.

உலக சுகாதார நிறுவன ஊழியர்கள் பலர் பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. பல பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுபற்றிய தகவல் வந்தததையடுத்து சுதந்திர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஆப்பிரிக்காவில் உள்ள கொங்கோ குடியரசு நாட்டில் 2018ம் ஆண்டு எபோலா நோய் பரவியது.

இதை கட்டுப்படுத்துவதற்காக உலக சுகாதார நிறுவனம் சிகிச்சை குழுக்களை அனுப்பி வைத்தது. இதில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்தவர்களும், காங்கோ நாட்டைச் சேர்ந்தவர்களும் இடம் பெற்று இருந்தனர்.

அவர்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று சிகிச்சை அளித்தனர். இவ்வாறு 100 க்கும் மேலான பணியாளர்கள் ஆங்காங்கே சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 2020ம் ஆண்டு வரை இந்த பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன.

உலக சுகாதார நிறுவன ஊழியர்கள் பலர் பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது. பல பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுபற்றிய தகவல் வந்தததையடுத்து தாமஸ் ராய்டர்ஸ் அறக்கட்டளை மற்றும் இன்னொரு அமைப்பு இணைந்து சுதந்திர விசாரணை மேற்கொண்டன.

அதில் உலக சுகாதார ஊழியர்கள் 9 பெண்களை பலாத்காரம் செய்தது உறுதியானது. 50 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்கள்.

இந்த செயல்களில் ஈடுபட்டதாக 83 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 21 பேர் உலக சுகாதார நிறுவனத்தால் பணியில் அமர்த்தப்பட்டவர்கள். அவர்களில் பலர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். 

இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கொங்கோ அரசும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment