இலங்கையில் 90 வீதமான கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 22, 2021

இலங்கையில் 90 வீதமான கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது

இலங்கையில் 90 வீதமான கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளரான வைத்தியர் சித்திரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சுமார் 5,000 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 200 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், துரதிருஷ்டவசமாக 52 கர்ப்பிணித் தாய்மார்கள் கொவிட் -19 இனால் இறந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

கர்ப்பிணித் தாய்மார்களின் அனைத்து கொரோனா இறப்புகளும் மே 2021 க்குப் பின்னர் பதிவாகியுள்ளன, வருடாந்தம் சுமார் 100 கர்ப்பிணித் தாய்மார்கள் இறக்கின்றனர், இந்தாண்டு இதுவரை 52 கர்ப்பிணித் தாய்மார்கள் ஏற்கனவே கொரோனா தொற்றால் இறந்துள்ளனர் என தெரிவித்த அவர், கர்ப்பிணித் தாய்மார்கள் கொவிட் -19 க்கு எதிரான தடுப்பூசியைப் பெறுமாறு வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment