சினோபார்ம் ஏற்றிய 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 3 ஆவது தடுப்பூசி அவசியம் - இலங்கை வைத்தியர்கள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 9, 2021

சினோபார்ம் ஏற்றிய 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 3 ஆவது தடுப்பூசி அவசியம் - இலங்கை வைத்தியர்கள் சங்கம்

இரண்டு தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டவர்களுக்கும் டெல்டா வைரஸ் தொற்றக்கூடிய தன்மைகள் அதிகமாகவே உள்ளது. எனவே சுகாதார வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.

இரண்டு சினோபார்ம் தடுப்பூசிகளையும் ஏற்றிக் கொண்ட அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாம் தடுப்பூசியாக பைசர், மொடர்னா அல்லது அஸ்டாசெனிகா தடுப்பூசியை ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் சுகாதார அமைச்சையும் வலியுறுத்தியுள்ளார்.

டெல்டா வைரஸ் பரவல் மோசமடைந்து வருகின்ற நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் சர்வதேச நாடுகள் இணைந்து முன்னெடுத்துள்ள ஆய்வில் டெல்டா வைரஸ் பரவலில் பாரதூரமான தனிமைகள் குறித்து வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் மூலமாக சுகாதார அமைச்சிற்கு முன்வைத்துள்ள அறிவிப்பு குறித்து வீரகேசரிக்கி தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment